Categories
மாநில செய்திகள்

கடலூர், நாகை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு! 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடலூர், நாகை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் குறக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் 30ம் தேதி வரை  அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் மற்ற சில மாவட்டங்களும் தன்னிச்சையாக கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில், கடலூரில் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை முதல் 30ம் தேதி வரை கடை திறப்பு நேரம் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையாக குறைக்கப்படுவதாக வணிகர்கள் அறிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு கடையடைப்பு என கூறியுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக  ஊழியர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

மேலும் நாகை மாவட்டத்தில் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மாலை 6 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுகடையடைப்பு எனவும் வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர்.  ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூன் 20ம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என ராணிப்பேட்டை மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |