ஜெர்மன் நாட்டை சேர்ந்த அடிடாஸ் நிறுவனம் ரிபொக் பிராண்டை விற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
உலகளவில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த அடிடாஸ் நிறுவனம் காலணிகள்,விளையாட்டு ஆடை தயாரிப்பு போன்ற விற்பனையில் முன்னிலையில் உள்ளது. அடிடாஸ் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சுமார் 3.8 பில்லியன் டாலர் கொடுத்து ரிபொக் பிராண்டை வாங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது ரிபொக் பிராண்டை விற்க முடிவு செய்துள்ளதாக அடிடாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ரிபொக் பிராண்டின் வணிகம் நடப்பாண்டின் முதல் காலாண்டில் இருந்து நிறுத்தப்பட போவதாக முதலீட்டாளர்களுக்கு அடிடாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இதற்குரிய காரணத்தை அடிடாஸ் நிறுவனம் இன்னும் தெரிவிக்கவில்லை.