கண்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பதற்கு என செய்யவேண்டும் என்று இப்போது பார்க்கலாம்.
நம்முடைய உடலில் கண் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு ஆகும். இந்த கண் மூலமாக அனைத்தையும் நம்மால் பார்க்க முடியும். கண் இல்லாவிட்டால் நம் வாழ்க்கையே மிகவும் கடினமாக இருக்கும். எனவே இந்த கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக என செய்யலாம் என்று பார்க்கலாம்.
முதலில் கண்களுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய வகையில் உங்கள் உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்த்து கண்களில் ஒற்றிக் கொள்ளுங்கள்.
ஐந்து விநாடிகள் கண்களை மூடி பின் திறந்து பாருங்கள்.
இளம் சூடான நீரில் துணியை நனைத்து கண்களின் ஓரங்களில் மசாஜ் செய்யுங்கள். பிறகு குளிர்ந்த நீரால் மீண்டும் ஒருமுறை மசாஜ் செய்யுங்கள். இதனால் கண்கள் புத்துணர்ச்சியோடு இருக்கும்.