குளிர்சாதன பெட்டிகள் நம் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறி வருகிறது. மீதமுள்ள பால் மற்றும் உணவு எல்லாவற்றையும் நாம் ஃப்ரிட்ஜில் தான் சேமித்து வைக்கிறோம். ஆனால் சில பொருள்களை அதில் வைக்கக்கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா? நாம் பிரிட்ஜில் சேமித்து வைக்கக் கூடாத 10 பெருள்களை பற்றி இதில் பார்ப்போம்.
தக்காளி- தக்காளியை பிரிட்ஜில் வைத்தால் அவற்றின் அமைப்புகளையும், சுவையையும் மாற்றி அமைப்பதால் சமையலறையில் தான் அதனை வைக்கவேண்டும்.
வெங்காயத்தை அடிக்கடி நாம் பயன்படுத்துகிறோம். சிலர் அதனை குளிர்சாதனப் பெட்டியில் தோலை உரித்து வைக்கின்றனர். அப்படி செய்தால் மற்ற உணவுப் பொருட்களுக்கு அருகில் இல்லாமல் இருக்குமாறு அதனை வைக்கவேண்டும்.
வாழைப்பழம் வெப்பமான சூழ்நிலையில் மற்றும் திறந்தவெளியில் தான் இருக்க வேண்டும். குளிரூட்டும் போது அவை வறண்டு பழையதாக மாறும்.
குளிர்காலங்களில் வெயிலில் இருக்கும் எண்ணெய் கெட்டியாக மாறுவதை நாம் கண்கூடாக பார்த்திருப்போம். குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாது. அறை வெப்பநிலையில் சேமித்து வைக்கப்படவேண்டும்
குளிரூட்டல் உருளைக்கிழங்கு கெட்டுப் போவதை விரைவுபடுத்தும்.
பூண்டு திறந்த வெளியில்தான் சேமிக்கவேண்டும்.
கெட்சப் குளிரூட்டப்பட்ட தேவை இல்லை என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்
பிரெட்,பிஸ்கட் போன்றவை புதிதாக மட்டுமே சாப்பிட வேண்டும். அவற்றை பிரிட்ஜில் வைத்து சாப்பிட கூடாது.
காபி குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாது. அது சுவையை முற்றிலும் மாற்றும்.