பெலாரஸிலிருந்து குடியேறும் நோக்கத்துடன் போலந்து நாட்டிற்கு வரும் அகதிகள் அந்நாட்டின் எல்லையில் காயங்களுடன் காத்திருக்கும் பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது.
பெலாரஸிலிருந்து போலந்து நாட்டிற்கு வரும் அகதிகள் பெலாரஸ்-போலந்து எல்லையில் கூடாரங்கள் அமைத்து கடும் குளிரிலும் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் போலந்து நாட்டைச் சேர்ந்த படையினர் அந்நாட்டிற்குள் நுழைய முற்படும் அகதிகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலந்து படையினருக்கும், அகதியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் அகதிகள் பலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே ஐரோப்பிய யூனியன் நாடுகள் பெலாரஸ், போலந்து வழியாக ஐரோப்பிய யூனியனுக்குள் நுழையும் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதிகளுக்கு உதவி செய்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.