Categories
உலக செய்திகள்

முகக்கவசம் அணிய மறுப்பு… வெளுத்து வாங்கிய சக பயணிகள்… நடுவானில் சலசலப்பு..

விமானம் ஒன்றில் முகக்கவசம் அணிய மறுத்த இரண்டு பேரை சக பயணிகள் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் சர்வதேச விமானப் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. இருந்தும் சில நாடுகள் சிறப்பு விமானங்களை இயக்கி கொண்டு வருகின்றன. சிறப்பு விமானங்களில் பயணிப்பவர்களை முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, போன்ற கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டேமில் இருந்து ஸ்பெயினின் ஐபிசா தீவுக்கு கே.எல்.எம் என்ற சர்வதேச விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.

விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் பொழுது அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கூறியிருந்தும் இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு பயணிகள் மட்டும் முகக்கவசம் அணியாமல் சென்றுள்ளனர். சக பயணிகள் அவர்களை முகக்கவசம் அணியுமாறு கூறினர். ஆனால் அதில் ஒருவர் மது அருந்தியிருந்தால் முகக்கவசத்தை அணிய மறுத்து சக பயணிகளை கொச்சை வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அந்த நபரை சரமாரியாக அடித்துள்ளனர். நடுவானில் விமானத்தில் நடந்த இந்த சண்டைக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த விமானம் தரையிறக்கப்பட்டதும் முகக்கவசம் அணிய மறுத்த பயணிகள் இருவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Categories

Tech |