காதலிக்க மறுத்ததால் இளைஞர் ஒருவர் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த புழல் புத்தகரத்தை சேர்ந்த 22 வயதான பெண் ஒருவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்போன் கடை நடத்தி வரும் சுதாகர் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சுதாகரின் நடத்தை சரியில்லாத காரணத்தினால் அந்தப்பெண் சுதாகரை விட்டு விலகி சென்றுள்ளார். நேற்று காலை அந்த பெண் வேலைக்கு செல்ல வீட்டில் தயாராகி கொண்டிருந்தபோது ஏன் என்னை காதலிக்க மறுக்கிறாய் என்றும், தன்னை காதலிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப்பெண்ணின் வயிறு, கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் அந்த பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு 108 வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார். காதலிக்க மறுத்த இளம் பெண்ணை வீடு புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.