Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் என்று பாராமல்… ட்விட்டரில் NO: 1 ட்ரெண்டிங்…. கடுப்பான அதிமுக ..!!

#என்னசொல்றீங்கபழனிசாமி என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவது அதிமுகவினரை கவலையடைய வைத்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஏழு – எட்டு மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டே ஒவ்வொரு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றது. திமுகவைப் பொறுத்தவரை மு.க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக இருக்கும் நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து திமுக அதிமுக என இரு கட்சிகளுக்கும் இடையே போஸ்டர்  சண்டை அதிகரித்து விட்டது. எதிர்க்கட்சியினரை விமர்சித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி விமர்சித்தும், ஆளும் கட்சியினரை விமர்சித்து திமுகவினரும் மாறி மாறி போஸ்டர் சண்டை போட்டு வருவது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

அண்மையில் கூட திமுக தலைவர் மு.க ஸ்டாலினை கேலி செய்து போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழக முதலமைச்சரை கேலி செய்யும் வகையில் திமுகவினர் போஸ்டர் ஒட்டி உள்ளதாக தெரிகிறது. இதனை #என்னசொல்றீங்கபழனிசாமி  என்ற ஹேஷ்டாக்கில் திமுகவினர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

முதலமைச்சர் என்று கூட பார்க்காமல் இப்படியான கருத்துக்களை பதிவிடுவது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்ததோடு, கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. #என்னசொல்றீங்கபழனிசாமி என்ற ஹேஷ்டாக் ட்விட்டர் டிரண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |