Categories
உலக செய்திகள்

பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல்… தந்தை செய்த கொடுஞ்செயல்… தீக்கிரையான குடும்பம்… ஜெர்மனில் பரபரப்பு…!

நபர் ஒருவர் குடும்பத்தாரை கொலை செய்துவிட்டு வீட்டை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனில் ஒரு குடியிருப்பில் வசித்து வரும் நபர் ஒருவர் தன் 41 வயதான மனைவி, 77 வயதான மாமியார் மற்றும் இரண்டு குழந்தைகளை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு வீட்டிற்கு தீ வைத்து தானும் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீடு திடீரென தீப்பிடித்து எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் இருந்த ஐந்து பேரின் சடலத்தை மீட்டனர். அதன் பிறகு இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர் குறித்த விவரங்கள் எதுவும் அப்பகுதி பொதுமக்கள் அது தெரியவில்லை.

Categories

Tech |