சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 570ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1,937 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 570ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விவரம் குறித்து சென்னை மாநகராட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், திருவொற்றியூர் -15, மணலி -1, மாதவரம் – 3, தண்டையார்பேட்டை – 66, ராயபுரம் – 158, திருவிக நகர் 94, அம்பத்தூர் 15, அண்ணாநகர் 53, தேனாம்பேட்டை – 56, கோடம்பாக்கம் – 54, வளசரவாக்கம் 17, ஆலந்தூர் – 9, அடையாறு -17, பெருங்குடி – 9, சோழிங்கநல்லூர் – 2, மற்ற மாவட்டங்கள் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.