தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 767ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்ட 210 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் மண்டல வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 189 பேரும், திருவிக நகர் – 169, தேனாம்பேட்டை – 85, தண்டையார்பேட்டை- 77 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருவொற்றியூர் – 17, மணலி – 1, மாதவரம் – 4, அம்பத்தூர் – 20, அண்ணாநகர் – 73, கோடம்பாக்கம் – 63, வளசரவாக்கம் – 30, ஆலந்தூர் – 9, அடையாறு – 19, பெருங்குடி – 9, சோளிங்கநல்லூர் – 2, மற்ற மாவட்டம் – ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணா நகர்,தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் இந்தப் பகுதிகளில் மட்டுமே அதிக வைரஸ் பாதிப்பு உள்ளது என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பில் சென்னை தான் முதலிடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.