தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1082 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை சென்னையில் 33,819 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை , கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த ஆறு மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் மண்டல வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் திரு.வி.க. மண்டலத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 259 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ராயபுரத்தில் 216 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தேனாம்பேட்டை – 132, தண்டையார்பேட்டை- 101 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருவொற்றியூர் – 19, மணலி – 3, மாதவரம் – 4, அம்பத்தூர் – 33, அண்ணாநகர் – 91, கோடம்பாக்கம் – 116, வளசரவாக்கம் – 60, ஆலந்தூர் – 9, அடையாறு – 19, பெருங்குடி – 9, சோளிங்கநல்லூர் – 3, மற்ற மாவட்டம் – 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.