தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்து ஜூன் மாதம் 9-ம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் திருமணம் முடிந்த பிறகு ஹனிமூன், சூட்டிங் எனப்படு பிசியாக இருந்த நிலையில், கடந்த 9-ம் தேதி இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக நயன்-விக்கி தம்பதியினர் கூறினர். கடந்த ஜனவரி மாதமே இந்தியாவில் வாடகைத்தாய் முறைக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில் திருமணம் ஆகி 4 மாதங்களில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி மற்றும் எப்படி வாடகைதாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என பல்வேறு தரப்பிலும் கேள்வி எழுப்பிய நிலையில், பெரும் சர்ச்சை வெடித்தது. இது குறித்து தமிழக அரசின் சார்பில் 3 பேர் கொண்ட குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக பதிவு திருமணம் நடந்ததாகவும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்ததாகவும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் ஆதாரங்களுடன் விசாரணை குழுவிடம் ஆவணங்களை காண்பித்ததாக ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. மேலும் இரட்டை குழந்தை விவகாரமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நயன் மற்றும் விக்கி தம்பதியினர் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்களுடைய வேலைகளில் மட்டுமே பிசியாக இருக்கின்றனர். அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கப் போய் தானே நயன் மற்றும் விக்கி தம்பதியினர் கூலாக இருக்கிறார்கள் என்ற ஒரு கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.