மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் பயன்பாடு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாதிரி வாக்குப்பதிவு ஒத்திகை நிகழ்ச்சி கரூர் பஸ் நிலையத்தில் வைத்து நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இதில் வாக்காளர்களிடம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் வாக்கு பதிவு இயந்திரம் செயல்படும் விதம் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர் எடுத்துக்கூறினார்.
மேலும் வாக்காளர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்ட பின் விவரங்கள் சரியாக காட்டுகின்றனவா என்பதையும் பொதுமக்கள் பார்வையிட்டு தெரிந்து கொண்டுள்ளனர். மேலும் இதுகுறித்து தேர்தல் அலுவலர் கூறியதாவது “அனைவரும் நேர்மையாக பதிவு செய்ய வேண்டும். உங்கள் வாக்குகளை பணத்திற்காகவும் பொருட்களை விற்க கூடாது. மேலும் தேர்தல் நடக்கும்போது அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” போன்றவற்றை வலியுறுத்தினார்.