Categories
மாநில செய்திகள்

வலுப்பெறும் வடகிழக்கு பருவ மழை…. முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை கூட்டம்…!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக நாகையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தை வருவாய் துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கலந்துகொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கைத்தறித் துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள மண்டல குழுக்கள் அமைத்தல் நிவாரணப் பணிகளை விரைந்து கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Image result for ஆர் பி உதயகுமார்  ஆலோசனைக்கூட்டம்

மேலும் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை சமாளிக்க மணல் மூட்டைகள் ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நாகை மாவட்டத்தில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் கிராமங்களின் பட்டியலை விரைந்து கணக்கெடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதிகளில் அதிகம் கவனம் செலுத்தி அரசு அதிகாரிகள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Categories

Tech |