Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு ”உறவினர் உதவி கிடைக்கும்” எதிர்பார்த்த காரியம் நடக்கும் …!!

மகரம் ராசி அன்பர்களே…!! சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்த கூடும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.பணவரவை விட செலவு கொஞ்சம் அதிகரிக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் விலைக்கு வாங்க வேண்டாம். சீரான ஓய்வு உடல் நலம் பெறுவதற்கு உதவும். இன்று குடும்பத்தில் இருந்த தடைகள் நீங்கும். கணவன் , மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும்.

புத்தி சாதுரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகளும் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் ஒன்றாகவே நடந்து முடிந்து , பாராட்டுகள் மனம் நிம்மதி கிடைக்கும். இன்று நீங்கள் செய்கின்ற காரியங்களில் நேர்த்தியான சூழல் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.

இன்று வெளியில் செல்லும்பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். சிவப்பு நிறம் அதிஷ்டமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |