மாணவர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் 2-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குதிரைச்சந்தல் கிராமத்தில் அரிகிருஷ்ணன் மற்றும் நிவேதா வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-டூ படித்து வந்துள்ளனர். அதன்பின் சோமண்டார்குடியில் இரண்டு பேரும் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் இதற்கிடையில் அரிகிருஷ்ணன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் இது பற்றி உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தற்போது அதே கோரிக்கையை வலியுறுத்தி உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து செல்ல செய்துள்ளனர்.