Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கணக்குகள் தொடர்பாக தகராறு…. செயலாளருக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ஊராட்சி செயலாளரின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடையக்குறிச்சி கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திம்மூர் கிராம ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இந்திரா லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணக்குகள் தொடர்பாக பழனிவேலுக்கும், ஊராட்சி மன்ற தலைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த பழனிவேல் தனது சொந்த ஊருக்கு வந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து அவரது குடும்பத்தினர் பழனிவேலை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பழனிவேல் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் ஆம்புலன்சில் இருந்து உடலை கீழே இறக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |