பெண்கள் தங்களது மன உளைச்சலை குறைத்து ரிலாக்ஸ் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு ஆனது நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வருகின்றனர். கணவன்மார்களும் வீட்டிலேயே இருப்பதால் பெண்களுக்கு இந்த சமயத்தில் வேலைப்பாடு என்பது அதிகரித்துவிட்டது.
இந்த நாட்களில் பெரும்பான்மையான நேரம் பெண்கள் சமையலறையிலையே செலவிடுவது போல் ஆகி விடுவதால், அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதற்கு தீர்வாக முன்கூட்டியே அந்த வாரத்திற்கான மெனுவை தயாரித்தால் நேரம் மிச்சமாகும். திட்டமிட்ட உடனே அதற்கான பொருட்கள் உள்ளனவா என்பதையும் சரி பார்த்து விட்டால் கடைசி நிமிட பதட்டத்தை தவிர்க்கலாம். இதன்மூலம் சமையலறையில் நேரம் செலவிடுவது குறையும் பெண்கள் ரிலாக்ஸ் செய்யும் நேரம் அதிகரிக்கும்.