வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு கூடிய விரைவில் அறிவிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
நேற்று வெளியான அறிவிப்பின்படி வரும் 23ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 50 சதவீத இறுக்கைகளுடன் திறக்கப்படும் என்று செய்தி வெளியானது. இதனால் வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் கூடிய விரைவில் அறிவிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.