Categories
உலக செய்திகள்

அவரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்… ஜோ பைடனின் அழுத்தமான கோரிக்கை…!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய எதிர்கட்சி தலைவரை விடுதலை செய்ய வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நேற்று முக்கிய கூட்டம் ஒன்று நடந்தது. அதில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த கொள்கைக்கு எதிரான முடிவுகள் பரிசீலிக்கப்பட்டது. அமெரிக்கா இனி டிரம்ப் போன்று ரஷ்யா ஜனாதிபதியிடம் நடந்து கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கூட்டத்தின் போது அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாவது, அமெரிக்காவின் மீது சீனா முன்வைத்துள்ள சவால்களை நேரடியாக ஏற்றுக் கொள்கிறோம். இருப்பினும் அமெரிக்காவின் நலன் கருதி சீனாவுடன் ஒன்று சேர்ந்து பணியாற்ற தயார் என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவை கடுமையாக விமர்சித்த ஜோ பைடன் தற்போது அலெக்ஸி நவால்னியை விடுதலை செய்ய வேண்டும் என்று அழுத்தமாக கோரிக்கை வைத்துள்ளார். ஏனென்றால் அவரது விவகாரம் வெறும் அரசியல் நோக்கம் கொண்டதே. அதனால் அவரை நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Categories

Tech |