‘நோ டைம் டூ டை’ (No Time To Die) என்று பெயரிடப்பட்டுள்ள ஜேம்ஸ் பாண்ட்-ன் 25-வது படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வரிசையில் டேனியல் கிரேக் நடிக்கும் புதிய படத்திற்கு ‘நோ டைம் டூ டை’ (No Time To Die) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது 25-வது திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=TozIaXQ-0CY
ஜமைக்காவில் இதற்கான படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் ராமி மாலேக் இப்படத்தின் வில்லனாக நடிக்க விருக்கிறார்.