Categories
சினிமா தமிழ் சினிமா

ஜாம்பி படத்தின் ரிலீஸ் உறுதியானது … மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!!

யோகிபாபு நடித்துள்ள ஜாம்பி  திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக படக்குழுவால்  அறிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழ் சினிமாவின் முன்னனி  காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர்  ஹீரோவாக நடித்த “தர்ம பிரபு” திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பின் இவர் “ஜாம்பி” என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக யோகிபாபு மற்றும் யாஷிகா, மனோபாலா, கோபி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Related image

இந்த படத்தை இயக்குனர் பவன் நல்லான் இயக்கியுள்ளார். இந்த படத்தில்  திகில், சஸ்பென்ஸ் மற்றும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது .

Categories

Tech |