இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளின் பொறியியல் தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலைக் கழகம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்பை பொறுத்தவரை முதல் பருவத்தில் இருந்து சிறப்பாக செயல்படும் மாணவர்கள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பை முடித்து பட்டதாரிகளாக வெளியேறும் மாணவர்களின் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தனியார் கல்லூரி மாணவர்களே அதிகமாக இடம் பிடித்துள்ளனர். அரசு பொறியியல் கல்லூரியில் 3 மாணவர்கள் மட்டும் இடம் பிடித்துள்ளனர்.