ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் தொடர்ந்து மூன்றாவது முறையாக லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் பூமி.
ஜெயம் ரவியின் 25வது படமான இதில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். மே ஒன்றாம் தேதி வெளியாக இருந்த இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிப் போனது. இந்த ஓடிடியில் வெளியாகும் என்று பல தகவல்கள் வெளியாகியது. இதனிடையே பூமி திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பொங்கலன்று வெளியாக உள்ளதாக நடிகர் ஜெயம்ரவி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இன்று காலை படம் ஓடிடியில் வெளியான சில மணி நேரத்தில் பைரஸி இணையதளத்தில் கசிந்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இணைய தளத்தில் படங்களை வெளியிட வேண்டாம் என்று சட்டங்கள் போட்டாலும், லீக்காவதை தடுக்க முடியாவில்லை. இதேபோன்று நேற்று தியேட்டரில் வெளியான மாஸ்டர் திரைப்படமும், சில மணி நேரங்களிலேயே எச்.டி., குவாலிட்டியுடன் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது