அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ்டேட் வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜீத் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல நடிகைக்கு ஹுமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகவும் டிரெண்ட் ஆனது.
இதையடுத்து இப்படத்தின் டீசர் கூடிய விரைவில் வெளியாகும் என்று எண்ணியிருந்த நிலையில் வலிமை திரைப்படம் வரும் அக்டோபர் 14ம் தேதி வெளியாகும் என வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.