Categories
மாநில செய்திகள்

கொரோனா அறிகுறியுடன் வீட்டிலே தனிமைப்படுத்துபவர்களுக்கான விதிமுறைகள் வெளியீடு!

கொரோனா தீவிரம் குறைவாக உள்ள நபர்கள் மற்றும் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில்,

  • லேசான அறிகுறி உள்ளவர்கள் என மருத்துவ அதிகாரியால் உறுதி செய்யப்பட வேண்டும்.
  • வீட்டில் தனிமைப்படுத்துவதற்கு தேவையான வசதிகள் இருக்க வேண்டும்.
  • வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள நோயாளியைப் பராமரிக்க ஒரு பராமரிப்பாளர் 24 மணி நேரமும் உடன் இருப்பார்.
  • பராமரிப்பாளருக்கும், மருத்துவமனைக்கும் இடையிலான ஒரு தொடர்பு இருக்க வேண்டும்.
  • இதேபோல், பராமரிப்பு பணியில் ஈடுபடுபவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜிங்க் மாத்திரைகள் எடுத்து கொள்ள வேண்டும்.
  • தனி கழிப்பறையுடன் நன்கு காற்றோட்டமான ஒன்றை அறை இருக்க வேண்டும் .
  • தனிமைப்படுத்தப்பட்டுள்ளவருக்கு கடுமையான அறிகுறிகள் தோன்றினால் அவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
  • வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள நோயாளிகளின் அறிகுறிகள் மருத்துவ ரீதியாக தீர்க்கப்பட்டால், கண்காணிப்பு மருத்துவ அதிகாரி ஆய்வக சோதனை முடிந்தபின் தொற்றுநோயிலிருந்து விடுபட்டதாக மருத்துவ அதிகாரி சான்றளிப்பார். அதன் பின்னர் தனிமைப்படுத்ததலை நிறுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |