உலகம் முழுவதிலும் டெக்னாலஜி வளர்ச்சியினால் நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் மொபைல் போன் மூலமாக தெரிந்து கொள்கிறோம். இந்த அடிப்படையில் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ ரிலையன்ஸ் ஆகிய முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் பயனளார்களுக்கான ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. அதன்படி JIO நிறுவனம் அறிவித்த விலை உயர்வானது டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. எனினும் JIO நிறுவனம் மக்கள் அனைவரும் வேறு நெட்வொர்க்கிற்கு மாறாமல் இருப்பதற்காக பல்வேறு ஆஃபர்களை வழங்கி வருகிறது.
ஜியோ நெட்வொர்க் அதன் பயனாளர்களை கவரும் வகையில் எந்த தொலைத் தொடர்பு நிறுவனமும் வழங்க முடியாத ஒரு ஆஃபரை அளித்து இருந்தது. அதன் அடிப்படையில் 1 ரூபாய்க்கு 30 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு டேட்டா பேக்கை அறிமுகப்படுத்தியது. வரும் புத்தாண்டை முன்னிட்டு ஸ்பெஷல் சலுகையை ஜியோ நெட்வொர்க் தற்போது அளித்துள்ளது. அதாவது 2545 ரூ பிரீபெய்டு பேக்கின் வேலிடிட்டி மாற்றப்பட்டுள்ளது. முன்பாக ஜியோவின் 2545 ரூ பேக்கின் வேலிடிட்டி 336 நாட்களாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த பேக்கின் வேலிடிட்டியானது மேலும் 29 நாட்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2545 ரூ பேக்கின் சலுகை தற்போது 365 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்கப்படுகிறது. முன்பே ஜியோ நெட்வொர்க் பயன்படுத்துபவர்களும், புதிதாக ஜியோ நெட்வொர்க்கில் இணைபவர்களும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த சலுகையின் மூலமாக தினசரி 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இதனால் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்துவோர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.