தன்னார்வலர்கள் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உணவில்லாமல் சாலை ஓரங்களிலும் பலர் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு கண்டறிந்து உணவு வழங்கி வரும் நிலையில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு, நிதியுதவியை வழங்கி வந்தனர். இதுபோன்று சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்று தமிழக அரசு இந்த உணவு பொருட்களை நேரடியாக யாரும் வழங்கக்கூடாது.
உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அரசுக்கு நிதி அளிக்கலாம், உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கலாம் என்று உத்தரவிட்டது. இதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன்பட பல்வேறு நபர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் அவசர வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, மக்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்றடைவதை உறுதி செய்து பாதுகாப்பாக கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் இயற்கை பேரிடர் போன்ற நிலையை விட மிகவும் ஆபத்தான பேரிடராக கொரோனா உள்ளது.
ஒரு தன்னார்வலர் உணவு வழங்க சென்றால் அதை வாங்க மக்கள் கூட்டமாக கூடுகிறார்கள், நேரடியாக நிவாரணப் பொருட்கள் வழங்கினால் நோய் தொற்று ஏற்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். 130 கோடி மக்களுக்கு அரசு மட்டுமே நிவாரண உதவிகளை வழங்க முடியாது. நிவாரண உதவி வழங்குவோர்கள் கைது நடவடிக்கைக்கு ஆளாகிறார்கள் என திமுக வழக்கறிஞர் தெரிவித்தார் வழக்கறிஞர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து வாதாடினார்கள். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்சுப்பையா, பொங்கியப்பன் அமர்வு இந்த வழங்கி நாளை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.