விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் 262 கோவில் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் பூசாரிகள் மற்றும் பிற தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பணியாளர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியானது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வி அமைச்சரான பொன்முடி கலந்து கொண்டார்.
அவர் கோவிலில் வேலை செய்யும் 262 தொழிலாளர்களுக்கு 4000 ரூபாய் வீதம், 10 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார். மேலும் அவர் அத்தியாவசிய பொருட்களான 2620 கிலோ அரிசி மற்றும் 15 விதமான மளிகைப் பொருட்களை பணியாளர்களுக்கு வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரான மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட வருவாய் அலுவலர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் பலர் உடன் இருந்து சிறப்பித்துக் கொடுத்துள்ளனர்.