நிவாரண நிதி கேட்டு நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 6 பேர் பலியாகியுள்ளனர்
ஆப்கானிஸ்தானில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அங்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தரப்பில் உதவித்தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் மேற்கு பகுதியில் இருக்கும் கோர் மாகாணத்தில் கூடுதல் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் அரசுக்கு எதிராக தலைநகர் பெரோஸ்கோவில் இருக்கும் கவர்னர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமைதியாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் திடீரென வன்முறைக்கு மாறியது. போராட்டக்காரர்கள் சிலர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர் அதனை தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நடைபெற்ற இந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டு 19 பேர் படுகாயமடைந்தனர்.