பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ_யின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய முக.ஸ்டாலின் 5 லட்சம் நிவாரணம் வழங்கினார்.
பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீ குடும்பத்தினரை சந்தித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். திமுக சார்பில் 5 லட்சம் நிவாரணம் வழங்கிய முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும் போது , பேனர் வைக்கக்கூடாது என்று நான் 2017_ஆம் ஆண்டே அறிவுறுத்தி இருந்தேன்.நீதிமன்ற உத்தரவை மீறி நூற்றுக் கணக்கான பேனர்களை ஆளுங்கட்சியினர் வழிநெடுக வைக்கிறார்கள்.சுபஸ்ரீயை இழந்து வாழும் தந்தை, தாய் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறி இருக்கேன்.
தொடர்ந்து ஸ்டாலின் பேசும் போது , அவர் என்னிடம் இதுவே கடைசியாக இருக்கட்டும் , இது தொடரக்கூடாது முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் வேதனையுடன் தெரிவித்தனர். நாங்கள் எவ்வளவோ ஆதரவு அளித்தாலும் சுபஸ்ரீ பெற்றோருக்கு மனம் ஆறுதல் அடைந்து இருக்காது. நீதிமன்ற உத்தரவை மீறிய ஆளுங்கட்சியினர் வைக்கின்றனர் வைக்கின்றனர். பேனர் கலாச்சாரமே இருக்க கூடாது என்பது எனது கருத்து என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.