Categories
சினிமா தமிழ் சினிமா

ரீமேக் செய்யப்படும் “திரிஷ்யம் 2″… இணையும் ராணா….!!

திரிஷ்யம் 2 ரீமேக் படத்தில் நடிக்க ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மலையாளத் திரையுலகில் கடந்த மாதம் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி திரிஷ்யம் படத்தின் முதல் பாகத்தை ரீமேக் செய்த அதே படக்குழுவே இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்கிறது.

மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தில் ஐஜி கதாபாத்திரத்தில் முரளி கோபி நடித்துள்ளார். இந்நிலையில் தெலுங்கில் எடுக்கப்படும் திரிஷ்யம் திரைபடத்தின் ஐஜி கதாபாத்திரத்திற்கு பிரபல நடிகர் ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இத்திரைப்படத்தின் வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் நடிக்க உள்ளனர்.

Categories

Tech |