Categories
சினிமா தமிழ் சினிமா

ரீமேக் படத்தில் ‘தல’யா….? புரட்சி தலைவரின் திரைப்படம்…. பேட்டி அளித்த முன்னணி இயக்குனர்…!!

எம்.ஜி.ஆர் படமான அன்பே வாவின் ரீமேக்கில் தல நடிக்க இருந்ததாக இயக்கனர் செல்வா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

தமிழ் திரையுலகில் ‘தல’ என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்படுவர் நடிகர் அஜித். இவர் தமிழ் திரையுலகில் முதன் முதலாக இயக்குனர் செல்வா இயக்கிய அமராவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து செல்வா நான் அவன் இல்லை படத்தின் வாயிலாக இயக்குனர் பட்டியலில் முன்னணி வகித்தார். இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் வெளியிட்டு வெற்றி அடைந்தார். ஆனால் இவரால் அறிமுகமான அஜித்துடன் மறுபடியும் கைகூடும் வாய்ப்புகள் இருந்தும் அது நடைபெறவில்லை.

இந்த நிலையில் நான் அவன் இல்லை படத்திற்குப் பின்பு அஜித் மற்றும் செல்வா எம்.ஜி.ஆர் படத்தின் அன்பே வா ரீமேக்கில் இணைய முடிவு செய்தனர். ஆனால் அந்த படத்தை அஜித் அடுத்த நிலைக்கு எடுத்து செல்லவில்லை. இதனால் இருவரும் இணைய முடியாத நிலை உருவானது என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் செல்வா கூறியிருந்தார். தற்போது தல அஜித்  வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து வினோத் மற்றும் அஜித் மூன்றாவது முறையாக கூட்டணி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |