Categories
தேசிய செய்திகள்

மறுமணம் செய்து கர்ப்பம்…. பிரசவத்தன்று குடும்பத்தோடு…. இளம்பெண் செய்த செயல்….!!

மறுமணம் செய்த பெண், கர்ப்பமாக இருந்த நிலையில் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஜெயேந்திரா கவூர்.  இவருக்கும் லவ்ப்ரீத் சிங் என்று நபருக்கும் திருமணம் நடந்த நிலையில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கவூர் மற்றும் சிங்க் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று பிரிந்துள்ளனர். இதையடுத்து கவூர்  தன்னுடைய மகள் மற்றும் தாயாருடன் வசித்து வந்துள்ளார். பின்னர் கவூர், ராஜா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதையடுத்து திருமணத்திற்கு பிறகு ராஜா தனது மனைவி கவூரை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

மேலும் ராஜா தன்னுடைய மனைவியை, அவரின் முதல் கணவர் சிங்குடன் சேர்த்து வைத்து சந்தேகப்பட தொடங்கியுள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ராஜா அவரை மிகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று அவருக்கு பிரசவம்   இருக்கும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், கணவரின் கொடுமையான செயலால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து கவூர் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் 3 பேரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |