Categories
தேசிய செய்திகள்

தட்டுப்பாடான ரெம்டெசிவிர் மருந்து…. மருத்துவரின் காலில் விழுந்த நோயாளியின் உறவினர்…. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்….!!

ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால் நோயாளியின் உறவினர் மருத்துவரின் காலில் விழுந்து கதறி அழுத சம்பவம் வேதனையை அளித்துள்ளது.

கொரோனாவின் 2வது அலை உலகம் முழுவதும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக டெல்லி, உத்தரபிரதேசம் மாநிலங்களில் நோயின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் மருந்து நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த மருந்து கள்ளச் சந்தைகளில் அதிக பணத்திற்கு விற்கப்படுகின்றது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர் ரெம்டெசிவிர் மருந்து வாங்கி வரும்படி நோயாளியின் உறவினரிடம் கூறியுள்ளார்.

ஆனால் அவரது உறவினர்கள் எங்கு தேடியும் அந்த மருந்து கிடைக்காததால் மருத்துவரின் காலில் வந்து விழுந்து “இந்த மருந்து கிடைக்கவில்லை தயவுசெய்து அவருக்கு ரெம்டெசிவிர் மருந்தைக் கொடுங்கள்” என கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |