ரெம்டெசிவர் மருந்து விற்பனை நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது. தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த மருந்து நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்படுகிறது என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் இரு ஸ்டேடியத்தில் கூடுதல் மையங்கள் அமைத்து ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.