விஜய் – அட்லீ இணைந்து வசூல் குவித்த ஹிட்டான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல நடிகர் நடிக்க இருக்கிறார்.
இயக்குனர் அட்லி நடிகர் விஜய்யை வைத்து “தெறி” படத்தை முதன் முதலாக இயக்கினார். அந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்தார். இப்படம் 2016ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி வெளியானது. வெளியான கொஞ்ச நாளிலே 175 கோடி ரூபாய் வரை வசூல் மழை குவித்தது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.
இப்படத்தில் தற்போது மறைந்த இயக்குனர் மகேந்திரன், நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, ராதிகா சரத்குமார், அழகம் பெருமாள் என பலரும் நடித்திருந்தனர். பாடலின் வரிகளின் அர்த்தத்தை புரிய வைக்கும் ஜி,வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவு செய்தவர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஆவார். இப்படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் குவித்ததால் இயக்குனர் அட்லி தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல், பிகில் என இயக்கினார்.
இந்நிலையில் பிறமொழிகளிலும் இந்த படத்தை ரீமேக் செய்வதற்கு பலரிடையே போட்டி ஏற்பட்டிருந்தது. அதனால் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான பணிகள் தொடங்கிருக்கிறது. இதில் இளையதளபதி நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் வருண் தவான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அட்லி ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கி கொண்டிருப்பதால், தெறி ரீமேக்கை இயக்க மாட்டார் என்று தகவல்கள் அரசல் புரசலாக பரவி வருகிறது.