நிவர் புயல் இன்று கரையை கடக்க இருக்கும் நிலையில் புதுவை மற்றும் கடலூரில் 10-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு என்பது தற்போது ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்று நிலையிலேயே தற்போது காலை முதலே பத்தாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் தானே புயல் கடந்த 2011ஆம் ஆண்டு வந்த போது இந்த 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு விடியற்காலை புயல் கரையை கடக்கும் போது நள்ளிரவு தான் ஏற்றப்பட்டது. ஆனால் தற்போது கிட்டத்தட்ட 12 மணி நேரம் முன்பாகவே இந்த புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது இதன் தீவிரத்தை தற்போது நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
இதனால் கடலோர மாவட்டங்கள், கடலோர கிராமங்களை மிகக் கடுமையாக பாதிக்கும் என்ற அறிகுறி ஆகும். எனவே தற்போதைக்கு 18 மீனவ கிராமங்களில் வசித்து வந்த மக்களை அப்புறப்படுத்துவதற்காக 74 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.10ஆவது எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது நாசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது எச்சரிக்கை என்று கணிக்கப்படுகின்றது.
அடுத்துள்ள 11ஆம் எண் எச்சரிக்கை கூண்டு என்பது முற்றிலுமாக தகவல் தொடர்பை துண்டிக்க கூடிய ஒரு என்ன ஆகும். இன்று பிற்பகல் கண்டிப்பாக இதனையும் ஏற்றுவார்கள் என்று சொல்லப்படுகின்றது. ஆகவே அரசு தற்போது மிகத் தீவிரமாக இறங்கி இருக்கிறது. முதற்கட்டமாக பொதுமக்களுடைய உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதால் புதுச்சேரி அரசு முனைப்புடன் இருக்கின்றது.
நகரப் பகுதியில் வலுவிழந்து இருக்கக்கூடிய மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு இருக்கின்றன. 144 தடை உத்தரவு நேற்று இரவு 9 மணிக்கு போடப்பட்டது. இதனால் இன்று காலை முதல் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. எந்த கடைகள் திறக்கப்படவில்லை. புதுச்சேரி தொடர்ந்து போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது.