Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்னனு நினைச்சீங்க…!! ”அப்படியெல்லாம் பண்ண முடியாது” – சென்னை மாநகராட்சி …!!

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை மறுஅடக்கம் செய்வதற்கு சாத்தியமில்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கடந்த 19ஆம் தேதி கொரோனா பாதிப்பால் சென்னையில் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரின்  கீழ்பாக்கம் கல்லறையில் மீண்டும் நல்லடக்கம் செய்யவேண்டும் என்று கோரி இருந்தார். இதனால் சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மருத்துவர் சைமனின் உடலை கீழ்பாக்கம் கல்லறையில் மீண்டும் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று சைமனின் மனைவி ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றை  அமைத்து இருந்தார்கள்.

Doctor Simon's Last Wish, His Wife's Request To Tn Cm ...

அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தற்போது இறந்தவர்களின் உடலை மீண்டும் நல்லடக்கம் செய்ய வாய்ப்பு இல்லை என்று சென்னை மாநகராட்சி சார்பாக தெரிவித்து இருக்கிறார்கள். இதில் மிக முக்கிய அம்சமாக அவர்கள் குறிப்பிட்டுள்ளது, கொரோனா வைரஸ் தொற்ற்றால் பாதிப்பு அடைந்து மரணம் ஏற்பட்டிருக்க கூடிய காரணத்தால் மீண்டும் உடலை எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறையில் மறுஅடக்கம் செய்வதற்கு சாத்தியமில்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறார்கள்.

Categories

Tech |