Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாரி டிரைவரை கொன்ற ரிமோட்…? நெடுஞ்சாலையில் விபரீதம்…!!

சென்னை அடுத்த அம்பத்தூரில் கண்டெய்னர் லாரியின் ரிமோட்டை தவறாக பயன்படுத்திய போது லாரி ஓட்டுனர் கழுத்து இறுக்கி உயிரிழந்தார்.

ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. இதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆனந்த் குமார் என்பவர் கண்டெய்னர் லாரியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். 29ஆம் தேதி ஆனந்தகுமார் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து கார்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இறக்கியுள்ளார்.  பின்னர் அதே கண்டெய்னர் லாரியை ஓட்டி கொண்டு புறவழி சாலையில் வந்து கொண்டிருந்தபோது அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பம் பகுதியில் லாரியை நிறுத்தி பக்கவாட்டில் உள்ளகண்டெய்னரில் இரு அடுக்குகளை இயக்கும் ரிமோட்டை சரி பார்த்து உள்ளார்.

அப்போது குனிந்து நோக்கியபோது ஆனந்தகுமார் கழுத்து இறுக்கப்பட்டு பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து பொதுமக்கள் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |