Categories
டெக்னாலஜி பல்சுவை

21 Game Apps- ஐ உடனே போனில் இருந்து நீக்குங்கள் – அதிர்ச்சி தகவல்

இன்றைய காலகட்டங்களில் தொழில்நுட்பங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. கையில் இருக்கும் ஆண்ட்ராய்டு, ஸ்மார்ட் போனில் நாம் உலகத்தையே தீர்மானிக்க முடியும் என்ற அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. எந்த அளவுக்கு தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதோ அந்த அளவு தொழில்நுட்பத்தில் சில கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் ஏற்படும் கோளாறுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிவர்த்தி செய்து வருகின்றன.

அதே போல் தான் தற்போது ப்ளே ஸ்டோரில் பயன்படுத்துவதற்கு ஒரு எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சூட் தெம், க்ரஷ் கார், ரோலிங் ஸ்க்ரோல், ஹெலிகாப்டர் அட்டாக்- நியூ, ரக்பி பாஸ், ஃப்ளையிங் ஸ்கோட்போர்ட், அயர்ன் உள்ளிட்ட 21 விளையாட்டு செயலிகளில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக அவாஸ்ட் நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது. ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் 21 விளையாட்டு செயல்களில் ‘ஆட்வேர்’ உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. ‘ஆட்வேர்’  என்பது செயலி நிறுவனங்களின் அனுமதி இல்லாமல் வெளியிடப்படும் விளம்பரமாகும்.

Categories

Tech |