அறுவை சிகிச்சை இன்றி சிறுமி விழுங்கிய ஐந்து ரூபாய் நாணயத்தை மருத்துவர்கள் வெளியேற்றியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குபேரபட்டினம் பகுதியில் போஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 1/2 வயதுடைய தனுசியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சிறுமி தனுசியா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டதால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக சிறுமியை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூக்கு, தொண்டை, காது சிறப்பு நிபுணர் டாக்டர் இந்துமதி, மயக்க மருந்தியல் டாக்டர் திவாகரன், டாக்டர் ராஜவேலு போன்ற சிறுமி விழுங்கிய நாணயத்தை அறுவை சிகிச்சையின்றி ஸ்கோப் மூலம் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் மருத்துவர்கள் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமி விழுங்கிய நாணயத்தை அகற்றிவிட்டனர்.