Categories
உலக செய்திகள்

பயங்கரவாதத்தை ஒழிக்கும் வேட்டை…. திடீரென்று களத்தில் இறங்கிய பாதுகாப்பு படையினர்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கும் வேட்டையில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் மற்றும் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

பலூசிஸ்தானிலிருக்கும் பொதுமக்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி பல தசாப்தங்களாக அந்த மாகாணத்தை ஆளும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கு எந்தவித பலனும் கிடைக்காத நிலையில், பாகிஸ்தான் படைகளுக்கு எதிராகவும், பொது மக்களுக்கு எதிராகவும் சில ஊடுருவல்காரர்கள் பயங்கரவாதம் மற்றும் வன்முறை தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.

இதனையடுத்து கடந்த மாதம் பாகிஸ்தான் ராணுவ படையினருக்கு எதிராக நடைபெற்ற 2 பயங்கரவாத மோதல்களில் 4 வீரர்கள் உயிரிழந்தும், 8 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். இதனை தொடர்ந்து பலூசிஸ்தானிலிருக்கும் ஹல்மெர்க் பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதத்தை ஒழிக்கும் வேட்டையில் இறங்கினர்.

இந்த வேட்டையில் அங்கு பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுத் தள்ளினர். அதன்பின் பயங்கரவாதிகள் வைத்திருந்த ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கிடையே மோதலில் நடந்த துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

Categories

Tech |