Categories
உலக செய்திகள்

பாரீஸ் அருங்காட்சியகத்தில் இருந்த புடின் சிலை நீக்கம்… உக்ரைன் அதிபர் சிலையை வைக்க பரிசீலனை…!!!

உக்ரைனில் தாக்குதல் மேற்கொள்வதை எதிர்க்கும் விதமாக, பாரிஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அதிபர் விளாடிமிர் புடினின் மெழுகு சிலை நீக்கப்பட்டிருக்கிறது.

பிரான்சின், பாரிஸ் நகரத்தில் இருக்கும் கிரெவின் அருங்காட்சியகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மெழுகு சிலை நீக்கப்பட்டது. கடந்த 2000-ஆம் வருடத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை அந்த சிலையை ஒரு கிடங்கில் வைத்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரின் சிலைகளுக்கு மத்தியில் புடினின் சிலை இருந்தது.

தற்போது, அந்த சிலையை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சிலையை வைக்க அருங்காட்சியகம் பரிசீலித்திருக்கிறது

இது தொடர்பில், அருங்காட்சியகத்தின் இயக்குனர் தெரிவித்ததாவது, ” கிரேவின் அருங்காட்சியகத்தில் ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளை எப்போதும் பிரதிநிதித்துவப்படுத்தமாட்டோம். அருங்காட்சியகத்தின் வரலாற்றிலேயே முதல் தடவையாக, தற்போது நடக்கும் வரலாற்று நிகழ்வுகளால் ஒரு சிலை திரும்பப் பெறப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

.

Categories

Tech |