Categories
மாநில செய்திகள்

ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாட்டால் உயிரிழப்பு ஏற்படாது…. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை விளக்கம்….!!!

புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் 3 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா 2-ம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையிலான உயர் கூட்டம் நடைபெற்றது.

மேலும் புதுச்சேரியில் தொற்று அச்சுறுத்தலை கட்டுப்படுத்த வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்திருப்பதாக தெரிவித்தார். அதன்படி கடைகள், அங்காடிகள், உணவு விடுதிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு தகுந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். மேலும் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தனியார் ஆம்புலன்ஸ்களைப் பயன்படுத்தவும் உத்தரவு விட்டுள்ளார்.

எனினும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பதில் அளித்த துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் “அடுத்து வரும் 10 நாட்களுக்கு தேவையான மருந்துகள் அனைத்தும் இப்போது கைவசம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு குறித்த தகவல் எனக்கும் வந்ததாகவும் இது குறித்து உடனே சுகாதாரத்துறை செயலாளரை தொடர்பு கொண்டு தக்க  நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளேன். மருந்து தட்டுப்பாட்டால் எந்த ஒரு நோயாளியின் உயிரும் போய்விட கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று  பாதிப்பைப் பொறுத்து அடுத்த ஊரடங்கு அறிவிக்கப்படும்” என்றும் கூறியுள்ளார்.

 

Categories

Tech |