Categories
மாநில செய்திகள்

ரெம்டெசிவர் மருந்து… இன்று முதல் தனியார் மருத்துவமனைகளுக்கு வினியோகம்…!!!

ரெம்டெசிவர் மருந்து இன்று முதல் தனியார் மருத்துவமனைகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து அரசு மருத்துவமனைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஆன்லைனில் ரெம்டெசிவர் மருந்துக்கு முன்பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு இன்று முதல் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன் பதிவு செய்த தனியார் மருத்துவமனைகள் மாவட்ட மருந்து கிடங்கில் ரெம்டெசிவர் மருந்தை பெற்றுக்கொள்ளலாம். சென்னை மையத்தில் 7 மாவட்ட மருத்துவமனைகள் ரெம்டெசிவர் மருந்தை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |