இந்தியாவின் ரெனால்ட் நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் தனது புதிய காரின் சோதனை ஓட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் ரெனோல்ட் நிறுவனம் தனது புதிய டஸ்டர் பி.எஸ். 6 காரின் சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த டஸ்டர் பி.எஸ். 6 கார் ஸ்பை படங்களில்முழுமையாக மறைக்கப்பட்ட்டுள்ளது. ஆனால், காரின் வெளிப்புறத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிகிறது.
மேலும், புதிய டஸ்டர் காரானது சமீபத்தில் அறிமுகமாகி விற்பனையாகி வரும் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் போன்றே இருக்கலாம் என தகவல் கூறப்படுகிறது. இந்த காரின் உள்புறமும் அதிகளவு மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. மேலும், இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 106 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு சி.வி.டி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின்: 85 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன், 110 பி.ஹெச்.பி. பவர், 245 என்.எம். டார்க் செயல்திறன் என இருவித டியூனிங்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு டியூனிங்கில் குறைந்த செயல்திறனுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், அதிக செயல்திறனுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்ம் கொடுக்கப்பட்டுள்ளது.