ரெனால்ட் நிறுவனம் தனது புத்தம் புதிய டிரைபர் எம்.பி.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்யதுள்ளது.
ரெனால்ட் நிறுவனம் தனது புதிய டிரைபர் எம்.பி.வி. காரை கடந்த ஜூன் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்நிறுவனம் இப்புதிய டிரைபர் எம்.பி.வி. காரை இந்தியாவிலும் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டிரைபர் காரை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில் புதிய அலாய் வீல்கள், கேரக்டர் லைன், ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 7.8 inch தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
1.0 லிட்டர் கெபாசிட்டி கொண்டுள்ள இந்த என்ஜின் மூலம் 71 பி.ஹெச்.பி. பவர், 96 என்.எம். டார்க் செயல்திறன் கிடைக்கிறது. இந்தியாவில் நான்கு வேரியண்டுகளில் வெளியாகியுள்ள இந்த கார் ரூ.4.95 லட்சம் முதல் ரூ.6.49 லட்சம் வரை விற்பனை செய்யப்படவுள்ளது.
வேரியண்ட் விலை
RXE -ரூ.4.95 லட்சம்
RXL -ரூ.5.49 லட்சம்
RXT -ரூ.5.99 லட்சம்
RXZ -ரூ.6.49 லட்சம்