சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே வீட்டு வாடகை பாக்கியை தராததால் வீட்டின் உரிமையாளர் வடமாநிலத்தவர்கள் கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்த குமார் என்பவர் தனது சகோதரருடன் சேர்ந்து வடமாநில இளைஞர்களை வேலைக்கு அனுப்பும் பணியை செய்து வந்தார். இதையடுத்து அங்கு பணிபுரிந்து வந்த 30க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களை அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் ராஜ் என்பவரின் வீட்டில் தங்க வைத்துள்ளார். தற்போது பணி இல்லாததால் வாடகை பணம் பாக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதை கேட்டு உரிமையாளர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அவர்களில் சிலர் சொந்த ஊருக்கு திரும்பி விட்டதாகவும் கூறப் படுகின்றது. எனவே வீட்டு வாடகை பணம் தராமல் யாரும் செல்லக்கூடாது என கூறி வட மாநிலத் தொழிலாளர்களை கடுமையாக தாக்கும் வீடியோ வெளியானது. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்து அவரை கைது செய்துள்ளனர்.